No results found

    குடியிருப்பு சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்பக்காடு பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடி யிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 120 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது. இதில் கஜாபுயலால் பாதிப்ப டைந்தவர்கள் மற்றும் நகர்புறத்தில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்ப ட்டு, அதற்கான ஆவண ங்களை வருவாய்து றை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சரிபார்க்கப்பட்டு உரியவர்களுக்கு வீடுகள் வழங்க பரிந்துரைக்க ப்பட்டது.அதனடிப்படையில் கடந்த ஆண்டு 9வது மாதம் 120 பயனாளிகளிடமிருந்து தலா 1 லட்சம் காசோலையாக நிர்வாகம் சார்பில் பெறப்பட்டது. இந்நிலையில் வீடுகள் பூர்த்தியாகி பயனா ளிகளிடம் ஒப்படைக்கும் தருவாயில் மீண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட வேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவுறுத்த ப்பட்டுள்ளது.எனவே இதனை ரத்து செய்ய வலியுறுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகள் சங்கத்தினர் அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பயனாளிகள் கூறுகையில் ஏழை எளிய மக்கள் நாங்கள் இருக்க வீடு இன்றி அன்றாடம் காய்சியாக வாழ்ந்து வருகிறோம், எதோ அரசின் சார்பில் இலவச வீடு என்றார்கள், அதனை நம்பி வந்தோம், ஆனால் ரூ 1 லட்சம் பயனாளிகள் கட்ட வேண்டும், மீதி பங்கை அரசு கட்டும் என்று கூறினார்கள், வேறு வழியின்றி விற்காததை விற்று 1 லட்சம் பணத்தை கட்டினோம், ஆனால் தற்போது மீண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட சொல்கிறார்கள், இருக்க வீடு இன்றி வாழும் எங்களால் இவ்வளவு தொகை எப்படி கட்ட முடியும். ஏற்கனவே கட்டிய பணத்திற்கு 8 மாதத்திற்கும் மேலாக வட்டி கட்டிக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் இப்படி ஒரு தகவல் பேரிடியாக உள்ளது.எனவே தமிழக அரசு கவனத்தில் கொண்டு அதிகாரிகள் கேட்கும் கூடுதல் தொகையை ரத்து செய்து அதை அரசே செலுத்த வேண்டும், அல்லது ஒன்றிய அரசால் போடப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து அதன் மூலம் வரக்கூடிய ரூ2 லட்சத்தை ஏழை எளிய மக்களுக்காக ஈடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் அரசு உதவிட முன்வரவி ல்லையெனில் அடுத்த கட்ட போராட்டமாக அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இதில் சிபிஐ மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال